இவ்வுலகில் அவ்வப்பொழுது அறிய குண விசேஷம் வாய்ந்த ஆன்மா பிறக்கிறது, அதன் தாக்கத்தால் சமுதாயம் ஆன்மாவின் உயர்வை உணரச்செய்கிறது. துன்பத்தில் தவிக்கும் உயிர்களுக்கு

உதவிக்கரம் நீட்டவும், ஆன்மீக வாழ்க்கை வாழ விரும்புவோர்க்கும் உதவுகிறது. இவ்வுலகின் தொன்மை வாய்ந்த வரலாற்றில் இத்தகைய ஆன்மிக வள்ளல்கள் பலர் தோன்றியுள்ளனர். வேத கால ரிஷிகளும், பைபிள் காலத்து தேவ தூதர்களும், மற்றும் தீர்க்க தரிசிகளும், இயேசு, புத்தா, மஹாவீரா, முஹம்மத் மற்றும் சமீபத்தில் பரமஹம்ச யோகானந்தா, ஸ்வாமி விவேகானந்தா, ஸ்ரீ ஆரோபிந்தோ மற்றும் ஸ்வாமி சிவானந்தா சரஸ்வதி ஆகியோர் தோன்றினர். சமீப காலத்தில் தோன்றிய மிக உயர்ந்த மகான் ஸ்ரீ ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி அவர்கள் வெற்றிகரமாய் யோகாவை சமுதாயத்துடன் இரண்டற கலக்கசெய்தார், மேலும் ஜாதி, மதம், குலம் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஆன்மீக முன்னேற்றம் அடைய ஊக்குவித்தார்.
தான் சன்யாஸ வாழ்வை மேற்கொண்ட இருபது வருடங்களுக்கு பின், தனது யோக சாதனைகளையும் ஆன்மிக முழுமையையும் பெற்றபின்னர், 1963 ல் பீகார் யோக பள்ளியை முன்கேரில் நிறுவினார். அதுவே உலகம் முழுவதிலும் இருந்து யோக அனுபவம் பெற மக்கள் கூடும் மையப்புள்ளியாய் மாறியது. இங்கிருந்து சுவாமி சத்தியானந்தா தன் குரு ஸ்வாமி சிவனதரின் கோட்பாடுகளின் மீது கொண்ட பக்தியால், தன் அளப்பரிய ஆற்றலை மனித குல நன்மைக்காக யோகா எனும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் எடுத்து சென்றார்.
2013ஆம் ஆண்டு பீகார் யோகா பள்ளியின் வரலாற்றில் ஓர் குறிப்பிடத்தக்க முக்கியமான ஆண்டாகும். ஏனெனில் பீகார் யோகா பள்ளியின் பொன்விழா ஆண்டாக 2013 கொண்டாட படுகிறது. 50 வருடங்களாய் மனிதகுலத்தின் ஆன்மீக உயர்விற்காக செய்யப்பட்ட சேவையை கொண்டாடும் விதமாய் உலகளாவிய யோகா சம்மேளனம் (WORLD YOGA CONVENTION) முன்கேரில் நடக்கவுள்ளது. ஆன்மிக தலைவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், மற்றும் சமுதாயத்தில் பல துறைகளில் முக்கியமானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் ஞானத்தையும், தங்களின் அற்புத அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வார்கள்.
சென்னையில் உள்ள சத்யானந்த யோகா மையம், பீகார் யோகா பள்ளியின் இத்தகையதோர் முக்கியமான கொண்டாட்டத்தின் அங்கமாய் தமிழகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உள்ளது. இதன் முதல் கட்டமாய் 50௦ இடங்களில் சதானந்த யோகா முகாம்களை ஓர் சேவையாய் நடத்த போகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 50 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 3 நாள் முகாம் ஒன்றை சத்யானந்த யோகா மையம் நடத்த போகிறது. உங்கள் பள்ளியில், அல்லது உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் இந்த முகாமை நீங்கள் நடத்த விரும்பினால் எங்களை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் உங்கள் பள்ளியில் “சத்யானந்த யோகா முகாமை” ஏற்பாடு செய்யுங்கள். எங்கள் மையத்தின் சத்யானந்த யோகா ஆசிரியர்கள் உங்கள் பள்ளிக்கு வந்து இத்தொண்டை செய்து கொடுப்பார்கள்.
சத்யானந்த யோகா மையம் கடந்த 10 ஆண்டுகளாய் சென்னையில் பீகார் யோகா பள்ளியின் ஓர் அங்கமாய் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ ஸ்வாமி சத்தியானந்தா அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சி முறைகளை பல்வேறு தேவைகளோடு வரும் அன்பர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது.
ஆரம்ப நிலை முதல் மிக உயர்ந்த நிலை வரை பல்வேறு பயிற்சிகளை நடத்தி வரும் சத்யானந்த யோகா மையம், ஹட யோகம், கிரியா யோகம், குண்டலினி யோகம், மந்திர யோகம், பக்தி யோகம், ராஜ யோகம், கர்ம யோகம், ஸ்வர யோகம், நாத யோகம் ஆகிய பல பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஒரு முறை சத்யானந்த யோகா மையம் வந்து குருநாதரின் அருளை பெறவும்.